வங்கக்கடலில் புதிதாக உருவாகி உள்ள ஃபானி புயல் வரும் 30, மே 1ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபானி புயல்: தயார் நிலையில் மீட்புப் படையினர்
விழுப்புரம்: ஃபானி புயலிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
இதனை எதிர்கொள்ளும் பொருட்டு, புயலின் போது பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல்துறை சார்பில் பேரிடர் மற்றும் மீட்புக்குழுக்கள் தக்க உபகரணங்களுடன் அமைக்கப்பட்டு விழுப்புரம் மாவட்ட கடலோரப் பகுதிகளான கோட்டக்குப்பம், மரக்காணம் போன்ற பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோட்டக்குப்பம் பகுதியிலிருந்த மீட்புப் படையினரிடம் எவ்வாறு மீட்புப் பணியில் ஈடுபட வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆலோசனை வழங்கினார். இந்த மீட்புப் படையினர் 24 மணிநேரமும் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள் என்று தெரிவித்தார்.