விழுப்புரம் மாவட்டம், ஆனத்தூர் கிராமத்தில் சில நாள்களுக்கு முன்பு தேமுதிக சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் பாஜகவினர் தங்களது கட்சிக் கொடியை ஏற்றி உள்ளனர். இது குறித்து தேமுதிகவினர் கேட்டதற்கு பாஜகவினர் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே பாஜகவினரின் கொடிக்கம்பம் அடையாளம் தெரியாத நபர்கள் சிலரால் சேதப்படுத்தப்பட்டது.
கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியது யார் என்றே தெரியாமல் தேமுதிகவினர் மீது பாஜகவினர் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் தேமுதிக நிர்வாகிகள் நான்கு பேர் மீது செஞ்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.