உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள இறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன நண்டு என்கிற குழந்தைசாமி. இவர் மீது கள்ளத்துப்பாக்கி வைத்திருத்தல், மான் வேட்டை ஆடுதல், அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரின் செயல்பாடுகளைப் பல நாட்களாக காவல்துறையின் உளவு பிரிவு கண்காணித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த நபர் குண்டர் சட்டத்தில் கைது!
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கள்ளதுப்பாக்கி வைத்திருந்தவர் குண்டர் சட்டத்தில் கைது!
இந்நிலையில், இவரது நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் பரிந்துரையை ஏற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் குழந்தைசாமியைச் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதன்பேரில் சின்ன நண்டு என்கிற குழந்தைசாமியைக் கைது செய்த காவல்துறையினர், கடலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.