விழுப்புரம்: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, "வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் சூழலில் நாம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன்படி வருவாய் துறை, வேளாண் துறை, காவல் துறை, மீன்வளத் துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகள் ஒன்றிணைந்து அவர் அவர்களுக்குள் வழங்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை துரிதமாக மேற்கொண்டு வரவிருக்கின்ற வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலங்களில் நீர் தடையின்றி செல்ல ஏதுவாக சுத்தம் செய்திட வேண்டும்.