விழுப்புரம் சரக டிஐஜியாக இருந்த சந்தோஷ்குமார் பதவி உயர்வுபெற்று சென்னைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அந்தப் பொறுப்பில் புதுச்சேரியைச் சேர்ந்த எழிலரசன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று பொறுப்பேற்றுக்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய எழிலரசன், "கரோனா விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதே எனது முதல்பணி. சட்டம்-ஒழுங்கைச் சிறப்பாகச் செயல்படுத்தி காட்டுவதே எனது தலையாய கடமை.
'நான் அதிகம் பேசமாட்டேன்; எனது செயல்களே பேசும்' - புதிய டிஐஜி எழிலரசன் - விழுப்புரம் சரக டிஐஜி எழிலரசன்
விழுப்புரம்: விழுப்புரம் காவல் சரகத்தைக் குற்றமில்லாமல் மாற்றுவதே தனது முதல் லட்சியம் என்று கூறிய புதிய டிஐஜி எழிலரசன் தனது செயல்களே பேசும் என்று தெரிவித்துள்ளார்.
!['நான் அதிகம் பேசமாட்டேன்; எனது செயல்களே பேசும்' - புதிய டிஐஜி எழிலரசன் elizharasan taking charge as villupuram dig](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:48:20:1593674300-tn-vpm-02-viluppuram-dig-take-oath-scr-7205809-02072020123502-0207f-00793-417.jpg)
ezhilarasan dig
விழுப்புரம் காவல் சரகத்தை குற்றமில்லாமல் மாற்றுவதே எனது லட்சியம். நான் அதிகம் பேசமாட்டேன்; எனது செயல்களே பேசும். பொதுமக்களின் குறைகளைக் களைய எனது அலுவலகக் கதவு எப்போதும் திறந்திருக்கும்" என்றார்.