கரோனா தொற்று பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால், ஏழை, எளிய மக்கள், கூலித்தொழிலாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர இரவு, பகல் பாராது பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களின் பங்கு இதில் அளப்பரியது.
இந்நிலையில், விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில், அதிமுக சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி பானாம்பட்டு சாலையில் நடைபெற்றது.