தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் வழக்கு: முன்னாள் டிஜிபி ஆஜர்.. - எடப்பாடி

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், சாட்சியம் அளிப்பதற்காக விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் டிஜிபி ஆஜரானார்.

villupuram court  sexual harassment  Woman IPS officer sexual harassment case  Ex DGP surrender in villupuram court  Ex DGP  villupuram  Woman IPS officer  Woman IPS officer case  ஐபிஎஸ் அதிகாரி பாலியல் வழக்கு  முன்னாள் டிஜிபி ஆஜர்  பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் வழக்கு  பாலியல் வழக்கு  முன்னாள் டிஜிபி  விழுப்புரம்  முன்னாள் முதல்வர் எடப்பாடி  எடப்பாடி  பாலியல் தொல்லை
பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் வழக்கு

By

Published : Nov 26, 2022, 12:29 PM IST

விழுப்புரம்:முன்னாள் முதல்வர் எடப்பாடி அவர்களின் பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி, பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (நவ. 25) முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் வழக்கு விசாரணைக்காக ஆஜராகினர்.

இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளான அப்போதைய தமிழ்நாடு போலீஸ் டிஜிபி தற்போது ஓய்வு பெற்றவருமான திரிபாதி, விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பாக சாட்சியம் அளித்தார்.

இந்த சாட்சியம் முடிந்ததும், வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரின் தரப்பு வக்கீல்களும் திரிபாதியிடம் தனித்தனியாக குறுக்கு விசாரணை செய்தனர். இந்த சாட்சியம் மற்றும் குறுக்கு விசாரணையின் விவரங்களை நீதிபதி பதிவு செய்துகொண்டார்.

இவ்வழக்கின் மீதான விசாரணை வருகிற 30-ந் தேதிக்கு ஒத்திவைத்ததோடு, அன்றைய தினம் தமிழக அரசின் முன்னாள் உள்துறை முதன்மை செயலாளரும், தற்போதைய வருவாய்த்துறை நிர்வாக ஆணையருமான பிரபாகர் நேரில் ஆஜராகும்படி நீதியரசர் புஷ்பராணி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ரவுடிகளுக்கு ஆப்பு: "டிராக் கேடி" செயலி தமிழ்நாடு காவல்துறை அறிமுகம்...!

ABOUT THE AUTHOR

...view details