விழுப்புரம்:இன்று (ஆக.24) செய்தியாளர்களிடத்தில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,'நாளை பொறியியல் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறும் என உயர்கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதுவரை நீட் தேர்வு முடிவுகள் வெளிவராத காரணத்தால் நாளை நடைபெற இருந்த பொறியியல் கலந்தாய்வு தேதி ஒத்திவைக்கப்படுகிறது' என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த இரண்டு நாட்கள் கழித்து பொறியியல் பொது கலந்தாய்வு நடைபெறும். இது போன்ற பிரச்சனைகளுக்காக தான் புதிய கொள்கை திட்டத்தை, தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாமல் மாநில கல்விக் கொள்கை மட்டுமே வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.