அதிமுக நிறுவனரும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக விழுப்புரம் மந்தகரை திடலில் நேற்று மாலை தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் திடீரென அவசர பணி நிமித்தம் காரணமாக அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னை சென்றுவிட்டதால், இந்த கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. இதையடுத்து தலைமைக் கழக பேச்சாளர் அன்பழகன், விழுப்புரம் நகர நிர்வாகிகள் பாஸ்கர், ஜி.கே. ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.