விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூா் அருகே ஏனாதிமங்கலம் ஊராட்சியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழமையான எல்லீஸ் தடுப்பணையில் சேதமடைந்த பகுதிகளை அமைச்சா் பொன்முடி இன்று ஆய்வு செய்து தரமாக கட்டித்தரப்படும் என உறுதியளித்துள்ளார்.
பின்னர் தொடர்ந்து பேசிய அவர், ”கடந்தாண்டு பெய்த கன மழையால் தடுப்பணை சேதமானது. தடுப்பணையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு கேட்டு அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
கோரிக்கையின் அடிப்படையில், சீரமைப்புப்பணிகளுக்காக ரூ.1.30 கோடி நிதி அரசால் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியைக் கொண்டு முழுமையாகப்பணிகளை மேற்கொள்ள முடியாது. எனவே, கூடுதலாக ரூ.1.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தர முதலமைச்சரிடம் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது .
அவசரமாகப்பணிகளை மேற்கொண்டால், மீண்டும் பழுது ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், சீரமைப்புப் பணிகளை முறையாக செய்யத்திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இதே பகுதியில் ரூ.75 கோடியில் புதிய தடுப்பணை அமைப்பதற்கான திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.