தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டம்! - Elementary school teachers meeting

விழுப்புரம்: பணி காலத்தில் மரணமடையும் உறுப்பினர்களின் குடும்பத்தாருக்கு ரூ.25 ஆயிரம் நிதி வழங்குவது என விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

elementary-school-teachers-meeting

By

Published : Apr 26, 2019, 4:26 PM IST

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இரண்டு நாள் மாநில பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ந.ரங்கராஜன் தலைமையில் 16 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு அவை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்.,

1) அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர்கள் பணிக்காலத்தில் மரணமடைந்தால், அவர்களது சேவையை நினைவூட்டும் விதமாக அவருடைய குடும்பத்தாரருக்கு வட்டார/மாவட்ட அமைப்புகளின் பரிந்துரையின் அடிப்படையில் இயக்கச் சார்பான குடும்ப நல நிதியாக ரூ. 25 ஆயிரம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

2) ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்காக உயர் நீதிமன்றத்தில் மாநில அமைப்பு வழக்கு தொடர அனுமதித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3) மத்திய - மாநில அரசுகள் ஆசிரியர்களுக்கும் சட்ட ரீதியாக பணி பாதுகாப்பு வழங்கிட தனி சட்டம் இயற்ற வேண்டும்.

4) அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் நீண்ட கால இலக்குகளை அடைய மாநில அளவில் மாபெரும் மாநாடு நடத்த வேண்டும் என்றும், அதைத்தொடர்ந்து சென்னையில் 9ஆவது மாநில மாநாட்டை நடத்தவும் மாநிலச் செயற்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5) மேலும், இயக்க விரோத செயல்களில் ஈடுபட்டும் மாற்று அமைப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அகஸ்டின், தெய்வீகன், ஜெகவீரபாண்டியன், அய்யனார், குருபரன், சக்திவேல் ஆகிய 6 நபர்களையும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குதல் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் செயற்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்பொதுக்குழுக் கூட்டம்!

ABOUT THE AUTHOR

...view details