விழுப்புரம்: திண்டிவனம் கோட்டைமேட்டை சேர்ந்த ஜெயபாரதி தனது மனைவிக்கு சிகிச்சை அளிப்பதற்காக திண்டிவனத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மின்சார ஸ்கூட்டரில் சென்றுள்ளார். மருத்துவமனை வாசலில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு இருவரும் மருத்துவமனை உள்ளே சென்றுள்ளனர்.
இந்நிலையில் சிறிது நேரத்தில் மருத்துவமனை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டர் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனைக்கண்ட சாலையில் சென்ற மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.