இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியாளர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 23ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். இதைத்தொடர்ந்து அக்டோபர் 1ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும், 3ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறவும் கடைசி நாளாகும். இதையடுத்து அக்டோபர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து 24ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். இதனால் இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று முதல் மாவட்டத்தில் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
மேலும் விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 387 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 607 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 546 பெண் வாக்காளர்களும், 25 திருநங்கைகளும் உள்ளனர்.