விழுப்புரம், கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விழுப்புரம் மாவட்ட கிளை சார்பில் விழிப்புணர்வுப் பரப்புரை நடைபெற்றது. இதில், மாநில தலைவர் மணிமேகலை பரப்பரையை தொடங்கிவைத்தார். மேலும், மாநில செயலாளர் சித்ரா, மாவட்ட பொறுப்பாளர்கள், வட்டார பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
கள்ளக்குறிச்சியில் கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வு பரப்புரை தொடக்கம்! - அரசுப்பள்ளி
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட கிளை சார்பில் கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது.
கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
இதில், தேசிய கல்விக் கொள்கை 2019 திரும்பப் பெறக் கோரியும் அரசுப் பள்ளிகளை மூடாமல் இருக்கவும் மூடிய பள்ளிகளை திறக்கக் கோரியும் தமிழ்வழிப் பள்ளிகளை அழைக்கக் கூடாது எனவும் தொடக்கக் கல்வித் துறையை சீரழிக்கும் அரசாணைகள் 100, 101, 145, 164 ஆகிய அரசாணையை திரும்பப் பெறக் கோரியும் தமிழ்நாடு முழுவதும் கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பரப்புரைத் தொடக்கம் நடைபெற்றது.
இதையும் படிங்க : மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி
TAGGED:
Educational Awareness