தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி! - விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு! - திருமாவளவன் எம்பி

விழுப்புரம்: தேசிய கல்வி கொள்கையை நிராகரித்து மாநில அரசுகளே கல்விக் கொள்கையை வரையறுக்கும் வகையில் கல்வி தொடர்பான அதிகாரங்களை மாநிலங்களுக்கான பட்டியலில் இடம்பெற செய்ய போராடுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vck
vck

By

Published : Mar 25, 2021, 5:05 PM IST

Updated : Mar 25, 2021, 6:33 PM IST

விழுப்புரத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி வெளியிட, அதனை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ”கலைஞர், ஜெயலலிதா போன்ற இருபெரும் தலைவர்கள் இல்லாத சூழலில், அதிமுகவின் முதுகில் ஏறி சவாரி செய்ய பாஜக முயற்சிக்கிறது. அதிமுகவை வீழ்த்துவதை பற்றி கவலையில்லை. ஆனால், சனாதன சக்தியான பாஜகவை அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்!

  • தலித்துகள், பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட்டுக்கான இட ஒதுக்கீட்டை முற்றாக ஒழித்துக்கட்டும், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் மேற்கொள்ளும் தனியார்மயப்படுத்துதல் போன்ற சதி முயற்சிகளை முறியடித்து சமூகநீதியை காப்போம்.
  • ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நெடுங்கால திட்டமான இந்து ராஷ்ட்ரத்தை அமைக்க பெருந்தடையாகவுள்ள இந்திய அரசமைப்பு சட்டத்தை மெல்ல மெல்ல நீர்த்துப்போக செய்யும் பாஜகவின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்துவோம்.
  • மொழிவழி தேசியம், மாநில உரிமைகள் மற்றும் மாநில சுயாட்சி ஆகியவற்றைப் பாதுகாத்து அரசமைப்பு சட்டம் முன்மொழியும் கூட்டாட்சி முறையைப் பாதுகாப்போம்.
  • மகளிர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, சட்டமியற்றும் அவைகளில் 50 விழுக்காடு பிரதிநிதித்துவம் அளிக்கும் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவர, களப் பணியாற்றுவோம்.
  • சாதி மதத்தின் பெயரால் விதைக்கப்பட்டு வரும் வெறுப்பு அரசியலையும், சமூகப்பிரிவினைப் போக்குகளையும் தடுத்திட அனைத்து தரப்பு உழைக்கும் மக்களையும் அணியப்படுத்துவோம்.
  • முற்போக்கு சனநாயக சக்திகளைத் தீவிரவாதிகள், தேசவிரோதிகள், மாவோயிஸ்டுகள் என முத்திரைக் குத்தி, அவர்களுக்கு எதிராக ஏவப்படும் அரச பயங்கரவாத ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராடுவோம்.
    மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி! - விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு!
  • தேசிய கல்விக் கொள்கையை வரையறுத்து, அதன்மூலம் 'ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே கலாச்சாரம்' என்னும்
  • சங்பரிவார்களின் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த, பாஜக மேற்கொள்ளும் பாசிச முயற்சிகளை முறியடிப்போம்.
  • மாநில அரசுகளே கல்விக் கொள்கையை வரையறுக்கும் வகையில் கல்வி தொடர்பான அதிகாரங்களை மாநிலங்களுக்கான பட்டியலில் இடம்பெற செய்ய போராடுவோம்.
  • ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்துப் போராடி, விவசாயம், குடிநீர் போன்றவற்றையும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்குரிய வாழ்வாதாரங்களான சுற்றுச்சூழலையும் பாதுகாப்போம்.
  • தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு மக்கள் துணையோடு தொடர்ந்து போராடுவோம்.
  • ஈழத்தமிழர் சிக்கலுக்குத் தமிழீழம் ஒன்றே தீர்வு என்பதை ஐநா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திற்கு உணர்த்தும் வகையில் தொடர்ந்து களப்பணிகளை மேற்கொள்வோம்.

இதையும் படிங்க: சசிகலா ஆதரவை கேட்கலாமா? ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆலோசனை

Last Updated : Mar 25, 2021, 6:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details