புதுச்சேரி மாநில அதிமுக செயலாளராக இருந்து வந்த புருஷோத்தமன் நேற்று விழுப்புரம் மாவட்டம் ராதாபுரம் பகுதியில் இருந்த தனது நிலத்தைப் பார்வையிட சென்றபோது விஷ வண்டு கடித்து உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்த புருஷோத்தமன் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நண்பகல் 12.00 மணியளவில் நேரில் சென்று, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். அவருடன் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விக்கிரவாண்டி எம்எல்ஏ முத்தமிழ்ச் செல்வன் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.