தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் இதுவரை ரூ.3.11கோடி பறிமுதல்! - money seized

விழுப்புரம்: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல் இதுவரை விழுப்புரத்தில் தேர்தல் அலுவலர்கள் நடத்திய சோதனையில் மூன்று கோடியே 11 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

villupuram ec 3crore seized

By

Published : Apr 12, 2019, 9:52 AM IST

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் தேதி நெருங்கிவரவுள்ள நிலையில், இதற்கான தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கிடையே வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 25 மணிநேரமும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 66 தேர்தல் பறக்கும் படை குழுக்களும், 33 நிலையான குழுக்களும் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த மார்ச் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 11) வரை இந்தக் குழுக்கள் நடத்திய சோதனையில் மூன்று கோடியே 11 லட்சத்து 72 ஆயிரத்து 77 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் 25 லட்சத்து 50 ஆயிரத்து 479 ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள், ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் புகையிலை, சாராயம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details