தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 67ஆவது பிறந்தநாள் ஆகஸ்ட் 25ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி கட்சியின் அமைப்பு ரீதியாக தமிழ்நாடு முழுவதும் 68 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 1,500 சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் இயந்திரங்கள் விஜயகாந்த் சார்பில் வழங்கப்பட்டன.
தலைகவசம் வழங்கிய தேமுதிக கட்சியினர் அதைத்தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட தேமுதிக சார்பில், கட்சியின் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் ரூ.7 லட்சம் மதிப்பிலான ஆயிரம் தலைக்கவசங்கள் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு தலைக்கவசத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் சுமார் 700 இருசக்கர வாகனங்களில் விழுப்புரம் முதல் விக்ரவாண்டி வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.