பெட்ரோல் பங்கில் அட்டூழியம் செய்த போதை ஆசாமி விழுப்புரம்:சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்குக்கு, விழுப்புரம் மரகதபுரம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குடிபோதையில் சென்றுள்ளார். அதோடு வாட்டர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்ப சொல்லி அங்கு பணிபுரியும் பெண் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றவே, காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பெண் காவலரிடமும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் போதையில் உள்ளதால் பெண் போலீஸ் சமாதானமாக பேசி அனுப்ப முயன்றார்.
இருப்பினும், அதை பொருட்படுத்தாமல், தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் அவர் அங்கிருந்து நகர்ந்தார். தமிழ்நாட்டில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் பாட்டில்களில் பெட்ரோல் தரக்கூடாது என்று காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் சில் பாட்டில்களில் பெட்ரோல் கேட்டு தொல்லை கொடுத்துவருகின்றனர் என்று பங்க் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஆவடியில் பணம் திருடு போனதாக நாடகமாடிய இளைஞர்கள் கைது