விழுப்புரம்: கடந்த ஒரு வார காலமாக மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் சாலைகள், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன.
மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு (Thenpennai river flood) ஏற்பட்டுள்ளது. எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு, தளவானூர் தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறுகிறது. விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்புப் பயிர்கள் நீரில் மூழ்கின.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கழுகுப் பார்வை காட்சிகள் மேலும் தளவானூர் அருகே திருப்பாச்சூரில் உள்ள தரைப்பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தற்போது தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டு இருசக்கர வாகன போக்குவரத்திற்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. தென்பெண்ணை ஆறு, அதன் கிளை ஆறான மலட்டாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் கழுகுப் பார்வை காட்சிகள் (Drone visuals) படமாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: TN Heavy rain: தமிழ்நாட்டில் மீண்டும் கனமழை எச்சரிக்கை