தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதையொட்டி அரசியல் தலைவர்கள் தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் நாடாளுமன்ற பாமக வேட்பாளர் வடிவேல் ராவணணை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விழுப்புரத்தில் நேற்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
தேர்தல் பரப்புரையின் போது பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது
விழுப்புரம் தியாகிகள் வாழ்ந்த மாவட்டம். 108 சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டுக்காக 21 தியாகிகள் தங்களின் இன்னுயிரை இழந்த புண்ணிய பூமி. பாமக போராடி பெற்ற இட ஒதுக்கீட்டுக்கு ஸ்டாலின் உரிமை கொண்டாடுகிறார். 108 சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டுக்காக நானும், லட்சக்கணக்கான பாமக தொண்டர்களும் சிறை சென்றுள்ளோம். திமுக அராஜகம் செய்யும் கட்சி. அவர்களுக்கு நாகரீகம் என்பதே கிடையாது. மாலை போட்டு கழுத்தை அறுப்பவர்கள்.