தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இட ஒதுக்கீடு!' - தமிழ்நாட்டு தலைவர்களை உஷார்படுத்தும் கி. வீரமணி

கள்ளக்குறிச்சி: இன்றைக்கு மத்திய அரசின் அறிவிப்பால் மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதாக உள்ளதென கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி தமிழ்நாட்டுத் தலைவர்களை உஷார்படுத்தியுள்ளார்.

kee veeramani
கி.வீரமணி

By

Published : Jan 25, 2020, 4:00 PM IST

Updated : Jan 25, 2020, 4:14 PM IST

நீட் தேர்வு எதிர்ப்பு விளக்கக் கூட்டம், திராவிடர் கழகம் சார்பில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. இதில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசுகையில், "இன்றைக்கு மத்திய அரசின் அறிவிப்பால் மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதாக உள்ளது.

இதனால் மாநில அரசின் கல்வி உரிமை முற்றிலும் பறிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து தலைவர்களும் ஒன்றுகூடி போராட வேண்டிய நிலையுள்ளது" என்றார்.

பெரியார் என்ற சொல் வெறும் வார்த்தை அல்ல; அது மின்சாரம் ஒளி கொடுக்கவேண்டிய நேரத்தில் ஒளி கொடுக்கும் எனத் தெரிவித்தார்.

தவறுதலாகக் கைவைத்தால் பதம் பார்த்துவிடும் என்று சொன்ன அவர், இன்றைக்கு சிலர் அப்படித்தான் கைவைத்து சிக்கிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

கி. வீரமணி

இதையும் படிக்க : 'ரஜினி குறித்தெல்லாம் கருத்து கூறமுடியாது' - அமைச்சர் உதயகுமார்

Last Updated : Jan 25, 2020, 4:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details