தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி போட்டியிடுகிறாரா..? - கள்ளக்குறிச்சி எம்பி! - விழுப்புரம்

விழுப்புரம்: "விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது" என்று, கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கெளதம சிகாமணி கூறியுள்ளார்.

Don't know about who are paricipate in vekkiravandi -kallakurichi MP

By

Published : Jun 30, 2019, 12:07 AM IST

கள்ளக்குறிச்சி-சின்னசேலம் இடையிலான ரயில்வே பாதை அமைப்பது தொடர்பாக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் பொன்.கெளதமசிகாமணி இன்று விழுப்புரம் மாவட்ட வனப் பாதுகாப்பு அலுவலரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கௌதம சிகாமணி, "கள்ளக்குறிச்சி - சின்னசேலம் இடையிலான ரயில்வே பாதை அமைப்பதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக, விழுப்புரம் மாவட்ட வனப் பாதுகாப்பு அலுவலரைச் சந்தித்து கோரிக்கை வைத்தோம். அவரும் இது தொடர்பாக விரைவில் பரிசீலனை செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாரா? என்பது தனக்கு எதுவும் தெரியாது" என்றார்.

விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி போட்டியிடுவது தெரியாது -கள்ளக்குறிச்சி எம்பி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details