தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விக்கிரவாண்டியில் வெற்றி நிச்சயம்! -திமுக வேட்பாளர் நம்பிக்கை - விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வெற்றி

விழுப்புரம்: அதிமுகவினரின் சூழ்ச்சிகளைத் தாண்டி விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வெற்றிபெறும் என அக்கட்சியின் வேட்பாளர் நா. புகழேந்தி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

DMK won in vikravandi bye election -DMK canditate Pugazhenthi

By

Published : Oct 21, 2019, 4:50 PM IST

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்றுவருகிறது. இதற்காக 225 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்துவருகின்றனர்.

விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட கொசப்பாளையம் பகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.

திமுக வேட்பாளர் நா. புகழேந்தி

கருணாநிதி ஆட்சியில் செய்த சாதனைகளைச் சொல்லி நாங்கள் பொதுமக்களிடம் வாக்கு கேட்டுள்ளோம். நிச்சயம் எங்களுக்கு இந்தத் தொகுதி மக்கள் வெற்றியைத் தேடித் தருவார்கள். இந்த வெற்றியை நாங்கள் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் சமர்ப்பிப்போம்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details