பாரதிய ஜனதா கட்சியின் அணி பிரிவு பிரதிநிதிகள் மாநாடு விழுப்புரத்தில் இன்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் விஏடி.கலிவரதன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன், மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
திமுக அனைத்து விஷயங்களிலும் இரட்டை நிலைபாடு எடுக்கிறது:எல்.முருகன் - DMK takes a double stand on all matters
விழுப்புரம்: திமுக அனைத்து விஷயங்களிலும் இரட்டை நிலைபாடு எடுக்கிறது என தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் பாஜக மாநாட்டில் தெரிவித்தார்.
விழுப்புரம்
இக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன், "திமுக அனைத்து விஷயங்களிலும் இரட்டை நிலைபாடு எடுக்கிறது. திமுகவின் இரட்டை நிலைபாட்டால்தான் இலங்கையில் பல லட்சம் பேர் கொத்துக் கொத்தாக இறந்ததற்கு காரணம். இதற்கான தண்டனையை உங்களுக்கு கொடுக்க பொதுமக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்” என்றார்.
இதையும் படிங்க:திமுகவையும், ஊழலையும் எப்போதும் பிரிக்க முடியாது: எல். முருகன்