மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில விவசாயிகள் லட்சக்கணக்கானோர் கடந்த பத்து நாட்களாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் திமுக சார்பில் இன்று கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு ஆதரவாக கொட்டு மழையில் ஆர்ப்பாட்டம்! - விழுப்புரம்
விழுப்புரம்: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திமுக சார்பில் கொட்டும் மழையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
dmk
அதன்படி, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் விழுப்புரத்தில் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற இதில், 200க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டு, கொட்டும் மழையிலும் கருப்புக்கொடி ஏந்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கோரும் ராகுல்