விழுப்புரம்:திமுக சார்பில் 2021 சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரால் கருத்து கேட்பு கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
திமுக சார்ப்பில் தேர்தலுக்கான கருத்துக்கேட்புக் கூட்டம்! 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! - விழுப்புரம் திமுக கருத்துக்கேட்பு கூட்டம்
திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான குழு, கலைஞர் அறிவாலயத்தில் 2021 சட்டப்பேரவைக்கான கருத்துகேட்பு கூட்டத்தை நடத்திவருகிறது. இதில் விவசாயிகள், சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்கப்படுகிறது.
![திமுக சார்ப்பில் தேர்தலுக்கான கருத்துக்கேட்புக் கூட்டம்! 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! dmk opinion meet in viluppuram](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9579532-thumbnail-3x2-viluppuram-dmk.jpg)
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவில் டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ். க.பொன்முடி ஆகியோர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சங்கம், வியபாரிகள், கல்வியாளர்கள் என பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து கருத்துக்களையும், கோரிக்கைகளையும் கேட்டு வருகின்றனர்.
மேலும், மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டு வருகின்றனர். இதில் 500க்கும் மேற்பட்ட திமுக பிரதிநிதிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.