விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று உள்ளாட்சி அமைப்பு வார்டுகள் எல்லை மறுவரை தொடர்பான பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் க.பொன்முடி உள்ளிட்ட எதிர்கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தங்களின் கோரிக்கைகளுக்கு சரியான மதிப்பளிக்கவில்லை என்று கூறி க.பொன்முடி உள்ளிட்ட எதிர்கட்சி பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி.,
"எதிர்க்கட்சிகள், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு இந்தக் கூட்டத்தில் செவி சாய்க்கவில்லை. எங்களுடைய கருத்துக்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. இது கருத்து கேட்பு கூட்டமாக இல்லை. கருத்து திணிப்பு கூட்டமாக உள்ளது. இதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆளுங்கட்சிப் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை. ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியருடன் ரகசிய கூட்டம் நடத்துகின்றனரா?" என கேள்வி எழுப்பினர்.
இதையும் பார்க்க: இளம்பெண்ணின் தங்கத் தாலியை அறுக்க முயன்ற இளைஞருக்கு அடி-உதை!