தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குப்பையை அள்ளுவதற்கு ரூ.1.5 கோடி செலவு; இதுதான் இவர்கள் திட்டம்: திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி விமர்சனம் - Villupuram

திங்கள்(பிப்.22) காலை 10 மணிக்கு திமுக சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி கூறியுள்ளார்.

குப்பை
dmk-mla-ponmudi-pressmeet

By

Published : Feb 21, 2021, 7:02 PM IST

விழுப்புரம்: விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த திமுக துணை பொதுச்செயலாளர் மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் க.பொன்முடி கூறுகையில், 'திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1ஆம் தேதி "ஸ்டாலின் தான் வாராரு; விடியல் தரப்போராரு" என்கின்ற பரப்புரை மிதிவண்டி பேரணி மாவட்டம் முழுவதும் நடைபெறும் என்றும் நாளை (திங்கள்) காலை 10 மணிக்கு திமுக சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

விழுப்புரம் நகரில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பூந்தோட்டகுளம் திறப்பு மற்றும் அடிக்கல் நாட்டு விழாவிற்கு நாளை வருகை தரும் முதலமைச்சருக்கு சாலையோரங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு இருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு,
"நீதிமன்றம் இதுபோன்ற பேனர்கள் வைப்பதற்குத் தடை விதித்திருக்கிறது. நீதிமன்றத்தை இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆட்சி மதிப்பதில்லை என்பதற்கான உதாரணம்தான் இது. இவர்கள் மக்களுடைய குறைகள்; கோரிக்கைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. இன்னும் இரண்டு மாதத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியில் இவைகளெல்லாம் சீர்திருத்தப்பட்டு,

விழுப்புரம் நகரம் முன்பு கலைஞர் ஆட்சியில் இருந்ததைப் போல, பல வளர்ச்சிகளை பெறும் என்று உறுதியளிக்கிறேன்" என்றார்.

குப்பையை அள்ளுவதற்கு ஒன்றரை கோடி ரூபாய் செலவு. இதுதான் இவர்கள் திட்டம் : திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி விமர்சனம்

இதைத்தொடர்ந்து 'அம்மா குளம்' என்று பெயரிட்டு இருப்பது குறித்த கேள்விக்கு, "அம்மா ஆட்சி என்று கூறிக்கொண்டு இன்று இந்தியாவிலேயே முதல் அமைச்சராக இருந்து குற்றம்சாட்டப்பட்டு சிறைக்கு சென்றவரின் பெயரை சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் நாட்டு மக்கள் நன்கு புரிந்து இருக்கிறார்கள். காலம் வரும்பொழுது எல்லாம் தானாக மாறும். மேலும் இவர்கள் புதிதாக குளத்தை உருவாக்கவில்லை. ஏற்கெனவே இருந்த குளத்தை தான் தூர்வாரி இருக்கிறார்கள். குப்பையை அள்ளுவதற்கு ஒன்றரை கோடி ரூபாய் செலவு. இதுதான் இவர்கள் திட்டம்" என்று விமர்சித்தார்.

இதையும் படிங்க:புதுவையில் தொடரும் ராஜினாமா; திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் பதவி துறப்பு

ABOUT THE AUTHOR

...view details