விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் க. பொன்முடி, "திமுக சார்பில் 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களை நேற்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்தோம். தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ், 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம் திமுக அரசியல் செய்வதாக கூறியிருந்தார்.
உண்மையிலேயே அரசியல் செய்வது அதிமுகவினர்தான். திமுகவினர் பொய் விண்ணப்பங்களை அளிப்பதாக அமைச்சர் காமராஜ் கூறியிருந்தார். இதற்குச் சாட்சியாக நான்கு நபர்களின் பேட்டிகளையும் அவர் வெளியிட்டிருந்தார்.
பேட்டி கொடுத்தவர்கள் குறித்து திமுக சார்பில் விசாரணை செய்யப்பட்டதில் இருவர் விழுப்புரம் அதிமுக நிர்வாகியின் உறவினர் எனத் தெரியவந்ததுள்ளது.