தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர்கள் சூசக பேச்சு; பாதியில் கிளம்பிய திமுக எம்எல்ஏ, எம்.பி.!

விழுப்புரம்: கோடை விழாவில் அமைச்சர்களின் சூசக பேச்சால் திமுக எம்எல்ஏ, எம்.பி. வாக்குவாதத்தில் ஈடுபட்டு பாதியில் வெளியேறினர்.

By

Published : Jul 14, 2019, 12:42 PM IST

திமுக

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன் மலையில் உள்ள கரியாலூர் கோடை விழா அரங்கத்தில் 23ஆவது கோடை விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை தொடங்கிவைத்தனர்.

இவ்விழாவிற்கு சங்கராபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் (திமுக) உதயசூரியன், கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் கவுதம சிகாமணி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது உரையாற்றிய உதயசூரியன் கல்வராயன் மலையில் உள்ள மலைவாழ் மக்களை வனத் துறையினரும் காவல் துறையினரும் அச்சுறுத்துவதாகவும், அவர்களின் இயந்திரங்களை பறிமுதல் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

அதன் பிறகு பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திமுக எம்எல்ஏ உதயசூரியன் மக்களின் நலனில் அக்கறையுடன் உள்ளார். ஆனால் அவர் வைத்த கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றிதான்வருகிறது. அவர் மேடையில் கைத்தட்டல் வாங்க வேண்டும் என பொதுமக்கள் முன் பேசுகிறார் என்றார்.

திமுக எம்எல்ஏ, எம்.பி. வெளியேறிய காட்சி

இதனையடுத்து பேசிய வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திரைப்படத்தின் பெயரை வைத்து திமுக எம்எல்ஏவை சூசகமாக பேசினார். இதனால் மேடையில் அமர்ந்திருந்த திமுக எம்எல்ஏ உதயசூரியன் ஆத்திரமடைந்து மாவட்ட ஆட்சியரிடத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு விழாவிலிருந்து எம்.பி. கவுதம சிகாமணியுடம் கிளம்பிச் சென்றார். இச்சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ABOUT THE AUTHOR

...view details