விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, பந்தல்குடியில் மகளிர் சுய உதவி குழுவினரிடம் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ஐ பேக் நிறுவனத்தை நம்பி திமுக தேர்தலில் நிற்கவில்லை. அவர்களின் திறமைகளை பயன்படுத்திக் கொள்கிறோம். ஆனால் எங்கள் கொள்கைகளில் இருந்து நாங்கள் மாறவில்லை.
அதிமுகவினருக்கு பதவி வெறி - கனிமொழி சரமாரி குற்றச்சாட்டு - கனிமொழி தேர்தல் பரப்புரை
விருதுநகர்: அதிமுகவினருக்குதான் பதவி வெறி அதனால்தான் நீட், மூன்று வேளான் சட்டங்களை ஆதரிக்கிறார்கள் என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
கனிமொழி
கிராம சபை கூட்டங்கள் மூலமாகதான் லோக்சபா தேர்தலில் திமுக வாக்குவங்கி அதிகரித்துள்ளது. அதிமுகவினர், அவர்கள் வாக்குவங்கியை பாதுகாத்துக் கொள்ளட்டும். திமுகவின் வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்று. பதவி வெறி எங்கள் தலைவருக்கு இல்லை. அதிமுகவினருக்குத்தான் பதவி வெறி உள்ளது. அதனால்தான் மத்திய அரசு கொண்டுவந்த நீட், மூன்று வேளாண் சட்டங்கள் உள்ளிட்டவற்றை ஆதரிக்கின்றனர்” என்றார்.
இதையும் படிங்க:திமுக அனைத்து விஷயங்களிலும் இரட்டை நிலைபாடு எடுக்கிறது:எல்.முருகன்