இதுதொடர்பாக பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விழுப்புரம் மத்திய மாவட்டக் கழகச் செயற்குழு ஆலோசனைக் கூட்டம் நாளை (04.08.2020) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில், விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி அரங்கில் சமூக இடைவெளியுடன் நடைபெறும்.
நாளை விழுப்புரத்தில் திமுக செயற்குழு கூட்டம்: பொன்முடி அழைப்பு! - mla Ponmudi
விழுப்புரம் மத்திய மாவட்டக் கழகச் செயற்குழு ஆலோசனைக் கூட்டம் நாளை (ஆகஸ்ட் 4ஆம் தேதி) நடைபெறும் என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் க.பொன்முடி அறிவித்துள்ளார்.
DMK executive committee meeting held tomorrow said mla Ponmudi
விழுப்புரம் மத்திய மாவட்ட அவைத்தலைவர் நா.புகழேந்தி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் நினைவு நாள் குறித்தும், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
எனவே, இந்தக் கூட்டத்தில் விழுப்புரம் மத்திய மாவட்டக் கழக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.