தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளை முதல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோருக்கான நேர்காணல்: பொன்முடி அறிவிப்பு - ponmudi dmk

விழுப்புரம்: திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நாளை முதல் நடைபெறும் என க.பொன்முடி அறிவித்துள்ளார்.

ponmudi dmk
பொன்முடி

By

Published : Nov 28, 2019, 10:47 PM IST

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ள திமுகவினருக்கான நேர்காணல் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி அரங்கில் நாளை (29.11.2019) காலை 9 மணியளவில் நடைபெறுகிறது.

எனவே, இந்த நேர்காணலில் விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி பொறுப்புகளான மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர், நகர மன்ற உறுப்பினர், பேரூர் மன்ற உறுப்பினர்களுக்கான விருப்பமனு அளித்த கழகத் தோழர்களும், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி மற்றும் வார்டு கழகச் செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திமுக பிரமுகர் வெட்டிக்கொலை! விழுப்புரத்தில் பதட்டம்!

ABOUT THE AUTHOR

...view details