விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த மயிலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மலேசிய எழுத்தாளர் ராஜேந்திரன் எழுதிய மந்திர கணங்கள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்புரையாற்றினார்.
அதன்பின், கல்லூரி வளாகத்தில் வந்து கொண்டிருந்தபொழுது அமைச்சரை மறித்து மாவட்ட பிரதிநிதி வீடூர் ஜெயராமன், தனது பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பிரகாஷ் தன் மீதும், தனது மகன் மீதும் போலீசில் தேவையற்ற பொய் வழக்குகளை பதியுமாறு போலீசிடம் கூறியுள்ளார்.
அதற்கு ஆதரவாக விக்கிரவாண்டி ஆய்வாளர் தன் மீது முதல்நிலை அறிக்கை பதிவு செய்து, தன்னை தேடி வருவதாக போலீசார் கூறுகின்றனர். போலீசாரிடம் கேட்டால் அமைச்சரும், அவருடைய மருமகனும்தான் உன் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடுகின்றனர் என கூறுவதாக அமைச்சரிடமே முறையிட்டார்.