நாடு முழுவதும் நடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக எண்ணப்பட்டுவருகிறது. இந்திய அளவில் பாஜக முன்னிலை வகித்தாலும் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியே முன்னணி பெற்றுள்ளது. 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்துவந்த திமுக கூட்டணி, இதுவரை நீலகிரி, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் வெற்றி - திமுக
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கௌதம சிகாமணி வெற்றி பெற்றுள்ளார்.
gowtham
இந்நிலையில், கள்ளக்குறிச்சி தொகுதியிலும் திமுக வெற்றிபெற்றுள்ளது. அத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கௌதம சிகாமணி ஆறு லட்சத்து 39 ஆயிரத்து 274 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுதிஷை விட நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார். அவரது வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடிவருகின்றனர்.