விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23ஆம் தேதி தொடங்கி இன்று நண்பகல் மூன்று மணியுடன் முடிவடைந்தது.
இதுவரை அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன்,நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி,இந்திய குடியரசுக் கட்சி வேட்பாளர் ரவிக்குமார், தமிழ் பேரரசு கட்சியின் நிறுவனரும் இயக்குநருமான கௌதமன், அகில பாரத இந்து மகா சபையின் வேட்பாளர் முருகன், சுயேச்சை வேட்பாளர்கள் அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன், அரசன், ராஜா, தங்கராசு ஆகிய ஒன்பது பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று திமுக வேட்பாளர் புகழேந்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக விக்கிரவாண்டி நகரப் பகுதியில் ஊர்வலமாக திமுகவினர் வந்தனர். அதையடுத்து விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.