தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இவர் பூரண குணமடைந்து விரைவில் மக்கள் பணியாற்ற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பூரண குணமடைய வேண்டி விழுப்புரம் மாவட்டம் கெடார் கிராமத்தில் உள்ள ஸ்ரீவரத சீனிவாசப் பெருமாள் ஆலயத்தில், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் எல்.வெங்கடேசன் ஆலோசணைப்படி காணை தெற்கு ஒன்றிய செயலாளர் கோழிப்பட்டு குமார் தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.