தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘எங்களுக்குள்ளும் சாதி இருக்கிறது’ - விஜய பிரபாகரன்! - விஜய பிரபாகரன்

விழுப்புரம்: தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட விஜய பிரபாகரன், சாதியை வைத்து அரசியல் செய்வோருக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன், எங்களுக்குள்ளும் சாதி இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் பேசிய விஜய பிரபாகரன்
கூட்டத்தில் பேசிய விஜய பிரபாகரன்

By

Published : Jan 13, 2021, 9:57 AM IST

Updated : Jan 13, 2021, 10:52 AM IST

விழுப்புரம் மாவட்ட தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (ஜன.12) மாலை விழுப்புரத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் தற்போது அரசியல் கட்சிகள் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பொய் பேச அதிக நாள்கள் தேவைப்படும் அதனால் தான் பரப்புரையை தொடங்கி விட்டனர். ஆனால், தேமுதிக உண்மையை சொல்ல சில நாள்களே போதும்.

ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பேரம் பேசி தேமுதிகவிலிருந்து சில குப்பைகளை அள்ளிச் சென்றுள்ளனர். அதை நாங்கள் வரவேற்கிறோம் குப்பைகள் அகற்றினால் தான் தங்க காசுகள் கிடைக்கும்.

என் தந்தையின் கனவை நிறைவேற்றவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன். தொண்டர்களோடு நிச்சயம் என் தந்தையின் கனவை நிறைவேற்றுவேன்.

கூட்டத்தில் பேசிய விஜய பிரபாகரன்

வருகிற சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னம் உதிக்கப் போவதில்லை தேர்தல் பரப்புரை என்ற பெயரில் அவர்கள் மக்களை மூளைச்சலவை செய்து வருகின்றனர்.

சாதியை வைத்து அரசியல் செய்வோருக்கு ஒன்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன், எங்களுக்குள்ளும் சாதி இருக்கிறது, எங்களின் சாதி தேசிய முற்போக்கு திராவிட கழகம். எங்களின் மதம் கேப்டன் விஜயகாந்த்" என்றார்.

இதையும் படிங்க: தேமுதிகவின் குப்பைகளை சுத்தம் செய்கிறார் ஸ்டாலின் - விஜய பிரபாகரன் தாக்கு!

Last Updated : Jan 13, 2021, 10:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details