விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள கலத்தப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகன்-பிரமிளா தம்பதியினர். இவர்களுக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர். அண்மையில் பெங்களூருக்கு கூலி வேலைக்குச் சென்றிருந்த முருகன், கரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
இதையடுத்து ஊரில் சொந்த வீடு இல்லாத காரணத்தினால், கலத்தப்பட்டுப் பகுதியில் இருக்கும் கருமகாரிய கொட்டகையில், தனது ஆறு குழந்தைகளுடன் தங்கியிருந்த பிரமிளா, உணவுக்கு வழியின்றித் தவித்து வந்துள்ளார்.
இதையும் படிங்க:விஜயகாந்தின் அறிவிப்பு உன்னதமானது - 'பவர் ஸ்டார்' பாராட்டு