தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘பீனிக்ஸ் பறவை போல் தேமுதிக மக்கள் முன்னாடி வந்து நிற்கும்’ - பீனிக்ஸ் பறவை

விழுப்புரம்: பீனிக்ஸ் பறவை போல் தேமுதிக மக்கள் முன்னாடி வந்து நிற்கும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

‘பீனிக்ஸ் பறவை போல் தேமுதிக மக்கள் முன்னாடி வந்து நிற்கும்’
‘பீனிக்ஸ் பறவை போல் தேமுதிக மக்கள் முன்னாடி வந்து நிற்கும்’

By

Published : Jan 30, 2020, 8:19 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் தேமுதிக கட்சியை சேர்ந்த நிர்வாகியின் திருமண விழாவிற்கு வருகை தந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகாரன், விழாவில் கலந்துகொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், தேமுதிக கூட்டணி தொடரும், நாங்கள் விஸ்வரூப வெற்றி பெறுவோம், பீனிக்ஸ் பறவை போல் தேமுதிக மக்கள் முன்னாடி வந்து நிற்கும் என்றார்.

கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி எந்த அளவு இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, வெற்றியின் உச்சம் எதுவரை இருக்கிறதோ, அதுவரை வருவோம் என விஜய பிரபாகரன் என பதிலளித்தார்.

‘பீனிக்ஸ் பறவை போல் தேமுதிக மக்கள் முன்னாடி வந்து நிற்கும்’

ABOUT THE AUTHOR

...view details