தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஜெயஸ்ரீ கொலைக் குற்றவாளிகளை என்கவுன்ட்டர் செய்ய வேண்டும்' - பிரேமலதா விஜயகாந்த்! - பிரேமலதா விஜயகாந்த்

விழுப்புரம்: சிறுமி ஜெயஸ்ரீ கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை என்கவுன்ட்டர் செய்ய வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்
செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்

By

Published : May 14, 2020, 4:06 PM IST

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர், மாணவி ஜெயஸ்ரீ. இவரை அதே பகுதியைச் சேர்ந்த முருகன், கலியபெருமாள் ஆகிய இருவரும் சேர்ந்து, பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சிறுமதுரை கிராமத்துக்கு நேரில் சென்று, ஜெயஸ்ரீயின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து 1 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "சிறுமி ஜெயஸ்ரீயின் கொலையை மனிதாபிமானம் உள்ள எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஜெயஸ்ரீ கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை என்கவுன்ட்டர் செய்ய வேண்டும்.

பெண்கள் மீது வன்முறையில் ஈடுபடுபவர்களை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பெண்களின் குரலாக தேமுதிக ஒலிக்கும்.

செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்

கரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்பட்டது. ஊரடங்கு முடிவடைவதற்கு முன்பே டாஸ்மாக் கடையைத் திறந்தது தவறு. ஊரடங்கு காலம் முடியும் வரை, டாஸ்மாக் கடைகளைத் திறந்திருக்கக் கூடாது'' என்றார்.

இதையும் படிங்க: சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொலை செய்தவர்களை என்கவுன்டர் செய்தால் 1 லட்சம் ரூபாய் பரிசு!

ABOUT THE AUTHOR

...view details