விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஜெயஶ்ரீ, அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரால் எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டணம் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இன்று சம்பவம் நடைபெற்ற சிறுமதுரை கிராமத்தில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சிறுமி கொலை குறித்து பேசிய எஸ்.பி ஜெயக்குமார் அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, "முன்விரோதம் காரணமாக, இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக அதேபகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்திவருகிறோம். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகிறோம்.
இந்த இரண்டு குடும்பத்துக்கும் இடையே கடந்த 7 வருடங்களாக பகைமை இருந்துவந்துள்ளது. இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்திவருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: அதிமுக பிரமுகர் வெறிச்செயல்: எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் கலங்கவைக்கும் வாக்குமூலம்!