கரோனா பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து, திருவண்ணாமலை வழித்தடத்தில் சென்ற அரசு பேருந்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியை பின்பற்றி பயணம் மேற்கொள்வதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடம் வெளியில் செல்லும் போது எப்பொழுதும் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியினை பின்பற்ற வேண்டுமென ஆட்சியர் அறிவுறுத்தினார்.
அரசு பேருந்தில் ஆய்வு செய்த ஆட்சியர்! - district collector inspect govt bus
விழுப்புரம்: அரசு பேருந்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியினை கடைப்பிடித்து பயணம் மேற்கொள்கின்றனரா என்பதை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரசு பேருந்தில் ஆய்வு செய்த ஆட்சியர்!
இதைத்தொடர்ந்து பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கை கழுவும் கிருமிநாசினி திரவம் வழங்கப்பட வேண்டும் எனவும் பேருந்து நடத்துநரிடம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.