தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கை' கொடுங்கள் சாதிக்கிறோம் - மாற்றுத்திறனாளிகள் நம்பிக்'கை' - disable persons petition to Vilupuram District Collector

விழுப்புரம்: அரசு தங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தால் விரைவில் சாதிப்போம் என்று 'கை கொடுக்கும் கை' மாற்றுத்திறனாளிகள் மல்லர் கம்பம் கலை குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அரசிடம் உதவிக்கரம் கேட்கும் 'கை கொடுக்கும் கை' மாற்றுத்திறனாளிகள் குழு
அரசிடம் உதவிக்கரம் கேட்கும் 'கை கொடுக்கும் கை' மாற்றுத்திறனாளிகள் குழு

By

Published : Feb 25, 2020, 10:25 AM IST

விழுப்புரம் மாவட்ட 'கை கொடுக்கும் கை' மாற்றுத்திறனாளிகள் மல்லர் கம்பம் கலைக்குழுவினர், நேற்று மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையைச் சந்தித்து மல்லர் கம்ப கலைக்கு தேவையான பொருளுதவி செய்து தருமாறு மனு அளித்தனர்.

பின்னர் இதுகுறித்து 'கை கொடுக்கும் கை' குழுவைச் சேர்ந்த பிரபு கூறும்போது, "இந்தியாவில் முதல் முயற்சியாக தமிழர்களின் பாரம்பரிய வீரக்கலையான மல்லர் கம்பம் கலையில், மாற்றுத்திறனாளிகளான நாங்கள் பயிற்சிபெற்றுவருகிறோம். இந்த மல்லர் கம்பம் கலையை, தமிழ்நாடு முழுவதும் அரங்கேற்றம் செய்துவருகிறோம். அதுமட்டுமல்லாமல் கூடிய விரைவில் இந்தக் கலையில் சாதனை படைக்க உள்ளோம்” என்றார்.

அரசிடம் உதவிக்கரம் கேட்கும் 'கை கொடுக்கும் கை' மாற்றுத்திறனாளிகள் குழு

மேலும் பேசிய அவர், "பல மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பயிற்சியளித்து விழிப்புணர்வு செய்துவருகிறோம். தமிழர்களின் பாரம்பரிய கலைகளை அழியவிடாமல் பாதுகாப்பதே எங்கள் நோக்கம். ஆனால், எங்களுக்குப் போதுமான பொருளாதார வசதியில்லாத காரணத்தால் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அரசு மல்லர் கம்பம் கலைக்குத் தேவையான பொருளுதவி செய்துதர வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:

கோடையின் தாக்கத்தைச் சமாளிக்கும் உயிரியல் பூங்கா!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details