சென்னை: திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார் (25). திரைப்பட இயக்குநராக படம் ஒன்றை இயக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அஜித் குமாருக்கு அறிமுகமான துணை நடிகை ஒருவரின் தோழியான 19 வயது கல்லூரி மாணவி பாஸ்போர்ட் எடுப்பதற்காக சென்னை வந்ததாக தெரிகிறது. அந்த மாணவி மதுரவாயலில் உள்ள அஜித்குமார் வீட்டில் தங்கி இருந்ததாகவும், இருவரும் ஒன்றாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது அஜித் குமார் சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி போதையில் இருந்த கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி மதுரவாயல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.