தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கத்தியைக் காட்டி ரூ.1.5 கோடி வைர நகைகள் வழிப்பறி! - 1.5 crore diamond theft in vikravaandi

விழுப்புரம்: விக்ரவாண்டி அருகே கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1.5 கோடி மதிப்பிலான வைர நகைகளை வழிப்பறி செய்த கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

விழுப்புரம்
விழுப்புரம்

By

Published : Sep 14, 2020, 9:52 AM IST

விழுப்புரம் மாவட்டம் ஆசாரம்குப்பத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி (55). இவர் தன்னிடமிருந்த பூர்விக வைர நகைகளை விற்பனை செய்வதற்தாக சென்னையைச் சேர்ந்த இடைத்தரகர்களை வரவழைத்து விக்ரவாண்டி அருகேயுள்ள கூட்டேரிப்பட்டு பகுதியில் வைத்து நகைகளை காண்பித்துள்ளார்.
பின்னர் இடைத்தரகர்கள் பணம் தருவதற்காக தீவனூர் சாலைக்கு, கருணாநிதியையும், அவரது நண்பரான பிரகலாதனையும் அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு இருவரையும் கத்தியைக் காட்டி மிரட்டியும், கண்ணில் மிளகாய் பொடி தூவியும் வைர நகைகளை அந்தக் கும்பல் பறித்து சென்றுள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.
வழிப்பறி செய்யப்பட்ட நகையின் மதிப்பு ரூ.1.5 கோடி இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details