இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வருகிற (அக்.16) அமாவாசை நாளன்று அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் அன்றைய தினம் பக்தர்களுக்கான அனைத்து வகையான தரிசனங்களும் தடை செய்யப்படுகிறது. இதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அங்காளம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் தடை!
விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் வருகிற அமாவாசை தினத்தன்று பக்தர்கள் தரிசனம் தடை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை அறிவித்துள்ளார்.
அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் தடை