தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்! - Grama Panchayat employees protest in Villupuram

விழுப்புரத்தில் கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

By

Published : Dec 16, 2020, 7:39 PM IST

விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் வளாகம் முன்பாக கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று (டிச.16) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பஞ்சாயத்து ஊழியர்கள் பங்கெடுத்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின் படி ஊதிய உயர்வுக்கான அரசாணை வெளியிட வேண்டும், மூன்று ஆண்டு பணி முடித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஊராட்சியில் ஏழாவது ஊதியக்குழு ஊதியம், நிலுவைத் தொகை பாக்கியை வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மேலும், தங்களது கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவரையும் பாதுகாத்திட வேண்டும் என மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய நாம் தமிழர் கட்சியினர் கைது

ABOUT THE AUTHOR

...view details