விழுப்புரம் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தினர் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது மாத ஊதியம் உடனடியாக வழங்கப்பட வேண்டும், பாதுகாப்பு விதிமுறைகளுடன் பேருந்துகளை இயக்க வேண்டும், பேரிடர் காலத்தில் ஊழியர்களுக்கு நெருக்கடி தரக்கூடாது, பேருந்துகள் முழுமையாக இயங்காத நிலையில் சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் அவர்கள் பொது மேலாளரைச் சந்திக்க உள்ளே செல்ல முற்பட்டபோது காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.